துலாம்

18.7.2026 முதல் 24.7.2026 வரை

சாதகங்கள்: பாக்கிய ஸ்தானத்தில் புதன் இருப்பதால் நல்ல செய்திகள் வரும். சூரியன், குரு தொழில் முன்னேற்றத்தை வழங்குவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் தொடங்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் வெற்றி பெறும். லாபஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால், பொருளாதாரத்திலும், குடும்பத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆறில் உள்ள சனி பொருளாதாரத்தை அதிகப்படுத்தும்.நண்பர்களின் நட்பு கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் அமைப்பு உண்டு.

கவனம் தேவை: உடல்நலத்தில் அலட்சியம் வேண்டாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் பொறுமையுடன் பேசுவது நல்லது. பண விஷயங்களில் கவனமாக முடிவெடுக்க வேண்டும். வீடு கட்டும் பணி, நிலம் வாங்குதல் போன்ற விஷயங்களில் கவனம் தேவை. ஏழுக்குரிய செவ்வாய் எட்டில் இருப்பதால், முன்கோபத்தாலும் அவசர முடிவுகளாலும் சங்கடப்பட வேண்டாம். பிறரைப் பற்றி தேவையில்லாத கருத்துக்களை வெளியிட வேண்டாம்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லுங்கள்.