தனுசு

(4.12.2025 முதல் 10.12.2025 வரை)

சாதகங்கள்: வக்ரம் நீங்கிய சனி மூன்றாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் இடத்தில் வெற்றியைத் தரும் ராகுவும் அமர்ந்திருக்கிறார். குரு எட்டில் மறைந்தாலும் தன குடும்ப ராசியைப் பார்வையிடுவது சிறப்பு. குடும்பப் பிரச்னைகள் குறையும். தன பாக்கியங்கள் அதிகரிக்கும். வேலையில் தனித்துவமான திறமையைக் காட்டுவீர்கள். போட்ட திட்டங்கள் செயல்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். இடம் பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்கால முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் தலைதூக்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும்.

கவனம் தேவை: சனி வக்ரம் நீங்கினாலும் குரு வக்ரம் பெறுகிறார். ஒரு பிரச்னை நீங்கினாலும் இன்னொரு பிரச்னை தோன்றும் வாய்ப்பு உண்டு. கவனக்குறைவால் சில சிரமங்களை எதிர்கொள்வீர்கள். வீண் பழிகளுக்கு ஆளாகாமல் ஜாக்கிரதையாக இருங்கள். நெருங்கிய உறவுகளுக்குள் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். மனக்கசப்புகள் வரலாம். பிறர் விஷயத்தில் தலையிடாதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.

சந்திராஷ்டமம்: 7.12.2025 இரவு 10.39 முதல் 10.12.2025 அதிகாலை 2.23 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்: தினமும் பூஜை அறையில் பிரார்த்தனை செய்யும்பொழுது ஒரு நிமிடம் உங்கள் முன்னோர்களை நினைத்துக் கொண்டு ஆசி பெறுங்கள். அந்த ஆசி உங்களை வழிநடத்தும்.