18.7.2026 முதல் 24.7.2026 வரை
சாதகங்கள்: ராசியில் ராகு இருப்பதால் புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஆறாம் இடத்தில் சூரியன், குரு இருப்பதால் எதிரிகளை வெல்வீர்கள். கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். உடல்நலம் மேம்படும். குரு, உச்சம் பெற்று, இரண்டாம் இடத்தைப் பார்ப்பது சிறப்பு. பொருளாதார முன்னேற்றம் தடைபடாது. ஏதோ ஒரு வகையில் குடும்பத்தில் சிக்கல்கள் குறையும். புதிய முயற்சிகள் மேற் கொள்வீர்கள். நல்லவர்களின் சகவாசம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால், ஆடை ஆபரணம் வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
கவனம் தேவை: அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று செயல்படுங்கள். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகளை அமைதியாக சமாளிக்கவும். ராசியில் ராகுவும், இரண்டாம் இடத்தில் சனியும் இருப்பதால், எதையும் கவனமாகச் செய்யவும். கண்கள், பற்கள் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை, பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கையுணர்வு முக்கியம்.
சந்திராஷ்டமம்: 18.7.2026 இரவு 12.00 முதல் 21.7.2026 காலை 7.54 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
