(11.6.2026 முதல் 17.6.2026 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் சூரியன் பலம் பெற்றிருக்கிறார். திக்பலம் பெற்று பத்தாவது ராசியிலும், வாரத்தின் மத்தியில் 11-ஆவது ராசிக்கும் பிரவேசிக்கும் சூரியன் வெற்றி தருவார். புதனும் ஆட்சி. தன குடும்ப அதிபதி ஆட்சி பெற்று சூரியனுடன் இணைந்திருப்பது, அற்புதமான அமைப்பு. குடும்பம் இனிமை தரும். சங்கடங்கள் குறையும். போட்டித் தேர்வுகள் ஜெயிக்கும் படியான வாய்ப்புகள் கிடைக்கும். தற்காலிக வேலை நிரந்தரமாகும். பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருப்பினும், பொருளாதார ஏற்றம் உண்டு. வீடு கட்டும் பணி நின்று போய் இருந்தால், தொடரலாம். குடும்பத்தினர் ஆதரவு உண்டு.
கவனம் தேவை: மூத்த சகோதரர்களிடம் மனஸ்தாபம் வேண்டாம். அஷ்டமச் செவ்வாயும் ஏழாம் இடத்து ராகுவும் ராசியில் நிற்கும் கேதுவும், அவ்வப் பொழுது மனதை குழப்புவர். தவிர்க்க முடியாத தாமதங்களும் தடைகளும் சோம்பலும் அலைக்கழிக்கும். சுறுசுறுப்பு குறையும். கேது ராசிக்குள் இருப்பதால், அலைச்சல், காரியத்தடைகள் வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
பரிகாரம்: ஆதித்யஹிருதய பாராயணம், ஸ்ரீ ராமர் வழிபாடு நன்மை தரும்.
