மீனம்

1.1.2026 முதல் 7.1.2026 வரை

சாதகங்கள்: ஆறாம் இடத்தில் அமர்ந்துள்ள கேது தாராளமாக நன்மைகளைச் செய்யும் அமைப்பில் இருக்கிறார். குருவின் பார்வையால் கர்ம ஸ்தானம் பலம் பெறுகிறது. உங்கள் வேலை உத்தியோகச் சிறப்பு அங்கீகரிக்கப்படும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவிகள் வந்து சேரும் பத்தில் சூரியன் இருப்பதும் செவ்வாயோடு இணைந்து இருப்பதும் குரு பார்ப்பதும் இத்தகைய அம்சங்களை பெற்றுத் தரும். தாய் தந்தையரின் உதவி கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். திருத்தல தரிசனம் உண்டு.

கவனம்தேவை: ராகு 12-ஆம் இடத்தில் இருப்பதால் தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டி இருக்கும். கொஞ்சம் கவனம் இருந்தால் தப்பிக்கலாம். மருத்துவச் செலவுகள் ஏற்படும் அமைப்பும் உண்டு. விட்டுக் கொடுத்துச் செல்லவும். கணவன் அல்லது மனைவியின் ஆரோக்கியத்திலும் சிறு பிரச்னைகள் வரும். இருக்கும் வாய்ப்பை கலைஞர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு புது வாய்ப்புகள் குறைவாகவே வரும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அனுமன் கோயிலுக்குச் செல்லுங்கள். அனுமன் சாலிசா இயன்றால் பாராயணம் செய்யுங்கள்.