ரிஷபம்

(11.6.2026 முதல் 17.6.2026 வரை)

சாதகங்கள்: ராசிநாதன் சுக்கிரன், மூன்றாம் இடத்தில் குருவோடு இணைந்து இருக்கிறார். அவருடைய பார்வை உங்கள் லாபஸ்தானத்தில் உள்ள சனியின் மீது படிகிறது. சனியால் கிடைக்கக்கூடிய தொழில் ஆதாயங்கள் அதிகரிக்கும். எதிர்பாரா மாற்றங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முயற்சிகள் வெற்றியோடு மகிழ்ச்சியைத் தரும். துணைத் தொழில் செய்யும் வாய்ப்புண்டு. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாகன யோகமும், ஆடை ஆபரணச் சேர்க்கையும் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் வேகம் எடுக்கும். மேலதிகாரிகள் உங்கள் திறமையை அங்கீகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

கவனம் தேவை: ராசியில் சூரியன் 12ல் செவ்வாய். சகோதர உறவுகளில் கவனம் தேவை. சகோதரர்களால் சில நேரங்களில், பணச்செலவுகள் ஏற்படலாம். 10-ஆம் இடத்தில் ராகு இருப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். உறவுகளை அனுசரித்துச் செல்லவும். வீண் மனஸ்தாபங்கள் உருவாகலாம். வதந்திகளை நம்பி பிறரிடம் பகிர வேண்டாம். பழிச்சொல் வந்து சேரலாம் கவனம் தேவை. சொத்துக்கள்
வாங்குவதிலும் விற்பதிலும் கவனம் தேவை.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வணங்குங்கள். முயற்சிகள் வெற்றி பெறும்.