கடகம்

18.7.2026 முதல் 24.7.2026 வரை

சாதகங்கள்: ராசியில் சூரியன், குரு இணைந்திருப்பது மிகச் சிறந்த யோகம். மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாகும். சுக்கிரன் ராசிக்கு இரண்டில் இருப்பதால் கவர்ச்சியும் செல்வாக்கும் அதிகரிக்கும். மறைந்திருந்த வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும். தொழிலில் வருமானம் சீராக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். குரு ராசியில் உச்சம் பெற்று பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். லாபஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால், வீடு கட்டுதல் வாங்குதல் முதலிய விஷயங்கள் சிறப்பாக நடைபெறும். அசையும் சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு. பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு.

கவனம் தேவை: அகந்தை கலந்த பேச்சைத் தவிர்க்கவும். உடலுக்கு ஓய்வு கொடுங்கள். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்த வேண்டாம். செலவுகளில் சிக்கனம் கடைபிடிப்பது நல்லது. ராசியில் குரு நிற்பது ஸ்தான ரீதியாக சிறப்பாக இருக்காது. சில குழப்பங்களை மனதில் தருவார். அவைகளை நிதானத்தோடு கடக்க வேண்டும். ஆரோக்கியத்திலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, உணவு விஷயத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்து வழிபடுங்கள்.