டெல்லி : அதானி ஊழல், விவசாயிகள் பிரச்சனை, தமிழ்நாட்டிற்கு புயல் நிவாரணம் உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே மக்களவையில் பேசிய திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, தஞ்சை – பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக குற்றம் சாட்டினார்.மேலும் பேசிய அவர், “தஞ்சை – பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டத்துக்கான நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால் தற்போது வரை இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற ஒன்றிய அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா, இந்தி ஆதிக்கம் செலுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என் தெரிவித்தார். தமிழ்நாட்டில் எந்த ஒரு மொழியை கற்கவும் தடையில்லை என்றும் நிர்மலா சீதாராமனுக்கு திருச்சி சிவா பதில் அளித்தார். எந்த மொழியையும் கற்று கொள்ள திமுக தடையாக இருந்தது இல்லை என்றும் ஆதிக்கம் செலுத்துவதை தான் எதிர்த்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
The post தஞ்சை – பட்டுக்கோட்டை ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் : மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை appeared first on Dinakaran.