சாத்தான் வேதம் ஓதும் மோடி: இந்திய கம்யூ.கிண்டல்

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ரூ.5,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தேர்தல் நேரம் என்றால் இது போன்ற வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு, எதையும் நிறைவேற்றாமல் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவது பிரதமரின் வாடிக்கையாகும். அதற்கு உதாரணமாக இருப்பது மதுரை எய்ம்ஸ் ஆகும். தமிழ்நாடு அரசு மதுரை, கோவை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தது.

அத்திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் நிராகரித்து வஞ்சித்துவிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி பிரதமர் முழங்கியிருப்பது வேடிக்கையானது. காலையில் பறிக்கப்படும் மதுரை மல்லி, மாலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கும், அமெரிக்காவின் நியூயார்க் நகரங்களுக்கும் சென்று சேரும் அளவிற்கு வர்த்தகம் மேம்படும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தமிழ்நாடு அரசு கோரிய நிதியை வழங்காத மோடி, தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி முழங்குவது, சாத்தான் வேதம் ஓதிய கதையாக உள்ளது. ஊழலின் ஊற்றுக் கண்ணாக பாஜக விளங்குகிறது. அதிமுகவையும் வேறு சில ஊழல் கட்சிகளையும் மிரட்டி, உருட்டி தமிழ்நாட்டில் கூட்டணியில் வளைத்துப் போட்டுள்ளார் மோடி. இப்படிப்பட்ட பிரதமர் மோடி, ஊழலைப் பற்றி பேசுவதை மக்கள் காது கொடுத்து கேட்பதே இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: