விஜய்க்காக யாரும் காத்துட்டு இருக்கல: டிடிவி திடீர் வீராப்பு

 

அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும். தொகுதி பங்கீடு என்பது மிகவும் நுணுக்கமான, முக்கியமான விஷயம். அதை பொறுப்புடன் அமைதியான முறையில் முடிவு செய்ய வேண்டியது அவசியம்.

அதிமுக-பாஜ இடையே பேச்சுவார்த்தையில் தாமதம் இல்லை. உரிய நேரத்தில் அனைத்தும் சரியான முறையில் முடிவு செய்யப்படும். இதுவரை எந்த பிரச்னையும் எழவில்லை. எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசித்து கூட்டணி தொடர்பான முடிவுகளை அறிவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக- பாஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தவெக தலைவர் விஜய்க்காக தள்ளிப்போகிறதா? என்ற கேள்விக்கு, நான் நேர்மையான பதில் சொல்கிறேன். விஜய்யை எதிர்பார்த்து கூட்டணி பேச்சுவார்த்தை தள்ளிப்போகிறது என்ற தகவல் தவறானது. அவருக்காக யாரும் காத்திருக்கவில்லை… கூட்டணி பேச்சுவார்த்தைகள் தனித்தன்மையாக நடைபெற்று வருகின்றன.

அதிமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைவது உறுதி என்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று நேற்று முன்தினம் டிடிவி.தினகரன் கூறியிருந்த நிலையில், நேற்று அவருக்காக நாங்கள் காத்திருக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories: