கொலைகள் தினம்தினம் நடக்கின்றன: தவெக தலைவர் விஜய் விமர்சனம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன. இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்த தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டுகளை கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்? தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: