திமுக பற்றி பேச மோடி, அமித்ஷாவுக்கு யோக்கியதை இல்லை: வைகோ காட்டம்

 

திருப்பத்தூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை, மயானங்களில் உடல்களை எரிக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்காக மயானங்களில், சோலார் பேனல் அமைக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.

திமுக கூட்டணியில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். சட்டமன்ற தேர்தலில், ஒருகாலமும் நான் போட்டியிட மாட்டேன். திமுகவிற்காக என்னால் முடிந்த அளவிற்கு பிரச்சாரம் செய்வேன். திமுக கூறினால் அந்தந்த தொகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்வேன். விஜய் இப்போது தான் அரசியல் பிரவேசம் செய்கிறார். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. மோடியும், அமித்ஷாவும் தகுதியில்லாமல், திமுகவை அழிப்பேன் என்று பேசுகிறார்கள்.

எதிர்க்கட்சிகளை மிரட்டி அடியபணிய வைக்கும், பாஜவிற்கு திமுக பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளது. தமிழ்நாட்டை ஏற்கனவே இருந்த கவர்னர் சீரழித்தார். இப்போது வந்தவரும் சளைத்தவர் அல்ல. அவரைப்போல செயல்படுவார் என சந்தேகம் எழுகிறது. மோடி குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது. திருச்சியில் அவரை வரவேற்கவே ஆள் இல்லை. ஏன் கைத்தட்டவே ஆள் இல்லை. மோடி தமிழ்நாட்டில் நுழையவே முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: