வணிக கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூல்: நவம்பர் 29-ல் கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு

சென்னை: வணிக கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை கண்டித்து 29-ம் தேதி வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் 29-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.

வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள், கடை வாடகை தொகையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23-ந்தேதி கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிக மோசடியானது மட்டுமின்றி, வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோசமான தாக்குதலாகும்.

மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூர தாக்குதலாகும். மத்திய பாஜக அரசின் இந்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் வணிக கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ரூ.20,000 வாடகை செலுத்துபவர்கள், மாதம் ரூ.3,200 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என வணிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். வணிக கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டியை திரும்பப் பெறக் கோரி கடையடைப்பு போராட்டத்தை வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

The post வணிக கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூல்: நவம்பர் 29-ல் கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: