அடிப்படை உரிமைக்கு பாதிப்பு; ஜாமீன் மனுக்களை தீர்ப்பதில் ஒருநாள் கூட தாமதம் கூடாது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஜாமீன் மனுக்களை தீர்ப்பதில் ஏற்படும் ஒரு நாள் தாமதம் கூட பொதுமக்களின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அறிவுறுத்தி உள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஜாமீன் மனு நிலுவையில் உள்ளதாகவும், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறி பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திக்கும் நடைமுறையை நிராகரிக்க வேண்டும். ஜாமீன் மனுவை தீர்ப்பதில் ஒரு நாள் தாமதம் செய்வது கூட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மோசமாக பாதிக்கிறது. தனிநபர் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றது. இந்த வழக்கு எந்த நீதிபதியின் முன்வைக்கப்படுகிறதோ அதே தேதியில் இந்த வழக்கை எடுத்துக்கொள்ள வேண்டும், முடிந்தவரை விரைவாக முடிவு செய்யுங்கள். வேறு ஏதும் காரணம் இருந்தால் நவம்பர் 11ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post அடிப்படை உரிமைக்கு பாதிப்பு; ஜாமீன் மனுக்களை தீர்ப்பதில் ஒருநாள் கூட தாமதம் கூடாது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: