அரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவு காங்கிரஸ் எழுப்பியது பொதுவான சந்தேகம் : தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: அரியானா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்று முதல்வராக நயாப்சிங் சயானி பதவி ஏற்றார். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி சந்தேகம் எழுப்பியது. குறிப்பாக இவிஎம் எந்திரத்தில் 90 சதவீதத்திற்கும் மேல் பேட்டரி உள்ள தொகுதிகளில் பா.ஜவும், 60 முதல் 70 வரை பேட்டரி உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றதாகவும், இதே போல் 20 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட இவிஎம் எந்திரங்களில் பேட்டரி 90 சதவீதத்திற்கும் மேல் இருந்ததாகவும், இது எப்படி சாத்தியம்.

இதனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக சந்தேகம் கொள்வதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில் தலைமை தேர்தல் ஆணையம் நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது.

முழுத் தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் கட்சி கடந்த காலத்தை போலவே பொதுவான சந்தேகத்தை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் போன்ற ஒரு தேசிய அரசியல் கட்சியிடமிருந்து இதுபோன்ற ஒருசில குற்றச்சாட்டை ஆணையம் எதிர்கொள்கிறது. எந்த ஆதாரமும் இல்லாமல் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் குற்றம் சாட்டும் அணுகுமுறையை திருத்திக் கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கை நேரத்தில் இதுபோன்ற அற்பமான, ஆதாரமற்ற சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கிவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவு காங்கிரஸ் எழுப்பியது பொதுவான சந்தேகம் : தேர்தல் ஆணையம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: