இந்த திட்டத்தின் கீழ் 3 நிலைகளாக நடைபெற்ற தேர்வுகளில் 90 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 54 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கடந்த 23ஆம் தேதி பிரான்ஸ் அழைத்து செல்லப்பட்டனர். 5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அவர்கள் அங்குள்ள கல்வி முறை, கலாச்சாரம், தனிமனித ஒழுக்கம் உள்ளிட்டவற்றை கண்டு வியந்ததாக கூறினர். குறிப்பாக பிரான்ஸ் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பிரான்ஸ் நாட்டில் பின்பற்றப்படும் கல்வி முறை, ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை, மாணவர்களின் தனி திறன்களை அடையாளம் காணும் யுக்தி உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு அறிந்து கொண்டதாக கூறும் ஆசிரியர்கள் அவற்றை எளிய நடைமுறையில் தமிழக மாணவர்களுக்கு கற்று கொடுக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தனர். கனவு ஆசிரியர் திட்டம் மூலம் தங்களது கனவு நெனவானதாக கூறும் ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி வருங்கால ஆசிரியர்களுக்கு புது உத்வேகம் அளிக்கும் என்பதில் மாற்றம் இல்லை என்று நன்றி தெரிவித்து கொண்டனர்.
The post கனவு ஆசிரியர் திட்டம் மூலம் கல்விச் சுற்றுலா: பிரான்ஸ் நாடு சென்று திரும்பிய பள்ளி ஆசிரியர்கள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.