நாகர்கோவில், அக்.8 : வள்ளலாரின் 202 வது அவதார தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாகர்கோவிலில் உள்ள வள்ளலார் பேரவையில் அவதார தின விழா நடந்தது. மாநில தலைவர் பத்மேந்திரா தலைமை வகித்தார். பொது செயலாளர் மகேஷ் வரவேற்றார். மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அருட்பெருஞ்ஜோதி மகா தீபத்ைத ஏற்றினார். மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா வள்ளலாரின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ராஜன், ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளி தலைவர் டாக்டர் அருள் கண்ணன், கவுன்சிலர்கள் வளர்மதி கேசவன், கலாராணி, சுனில்குமார், கவுசுகி, தேவசம்பொறியாளர் ராஜ்குமார், கைத்தறி குழு முன்னாள் உறுப்பினர் பன்னீர் செல்வம், திமுக இளைஞரணி மாநகர அமைப்பாளர் சி.டி, சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேயர் மகேஷ் தூய்மை பணியாளர்களுக்கு ஆடை தானம் வழங்கி அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.
The post நாகர்கோவிலில் வள்ளலார் அவதார தின விழா மேயர் மகேஷ் பங்கேற்பு appeared first on Dinakaran.