சியாச்சின் ராணுவ முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடெல்லி : சியாச்சின் பனிசிகரத்தில் உள்ள ராணுவத்தின் முகாமில் குடியரசு தலைவர் திரவுபதிவு முர்மு நேற்று பார்வையிட்டார்.  இமயலமலையில் காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள சியாச்சின் பனிசிகரம் சுமார் 20ஆயிரம் அடி உயரத்தில் உள்ள து. இங்கு இந்திய ராணுவத்தின் அடிப்படை முகாம் இயங்கி வருகின்றது. இந்நிலையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று சியாச்சின் பனிச்சிகரத்தில் உள்ள ராணுவ முகாமினை பார்வையிட்டார்.

வீரர்களுடன் கலந்துரையாடிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு,கடுமையான பனிப்பொழிவு, மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் போன்ற கடுமையான சூழ்நிலைகளில் நாட்டை பாதுகாப்பதில் தியாகம் மற்றும் சகிப்பு தன்மையின் அசாதாரண உதாரணங்களாக இருக்கிறீர்கள். இந்திய ஆயுதப்படையின் தலைமை தளபதி என்ற முறையில் ராணுவ வீரர்களை குறித்து பெருமைப்படுகிறேன். அனைத்து குடிமக்களும் ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கு வணக்கம் செலுத்துகின்றனர்” என்றார். மேலும் இந்திய ராணுவ உடையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சியாச்சின் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

The post சியாச்சின் ராணுவ முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு appeared first on Dinakaran.

Related Stories: