இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் விசாரணை நடத்தியதில் வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் 4வது தெருவை சேர்ந்த வாசுதேவன் (22) என்ற நபர் அவரது நண்பர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரை முன்விரோதம் காரணமாக வெட்டுவதற்காக வந்துள்ளனர். அவர் கிடைக்காததால் அந்த இடத்தில் இருந்த முருகா என்பவரை வெட்டி விட்டு சென்றதும், செல்லும் போது 2 ஆட்டோ மற்றும் ஒரு பைக்கின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து வாசுதேவன் மற்றும் அவருடன் வந்த நபர்களை தேடி வருகின்றனர்.
The post முன்விரோதத்தில் வாலிபருக்கு வெட்டு appeared first on Dinakaran.