இதனால் ஆத்திரமடைந்த மூவரும், பயங்கர ஆயுதங்களுடன் வந்து, ரெட்டைமலை சீனிவாசன் மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவரையும் கத்தியால் ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர் பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் 6 தனிப்படை அமைத்து, மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் 5 பேரை கைது செய்து அவர்களிடம் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் இரட்டை கொலையில் முக்கிய குற்றவாளியான பட்டாபிராம் சொக்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (20) மற்றும் அவரது தம்பி முருகன் (19) ஆகிய இருவரையும் ஆவடி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post பட்டாபிராம் இரட்டை கொலையில் முக்கிய குற்றவாளிகளான அண்ணன், தம்பி சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.