இந்நிலையில், கட்டுமான உரிமையாளர் மற்ற வீடுகளை விற்பனை செய்ய முயன்ற போது, விசிக பிரமுகர் செல்வகுமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து இடையூறு செய்து மிரட்டியுள்ளார். மேலும், மாடியில் தனது நண்பர்களோடு அமர்ந்து மது அருந்தி தொல்லை கொடுப்பது மற்றும் வீடு வாங்க வரும் நபர்கள் மீது நாயை விட்டு அச்சுறுத்துவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், கடந்த டிசம்பர் மாதம் மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் ஷெட் அமைத்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்டிட உரிமையாளரிடம், நான் அப்படி தான் கட்டுவேன். நீ உன்னால் முடிந்ததை பார், என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து கடந்த 1ம் தேதி கமலஹாசன் அவரது ஊழியரை மேலே சென்று, ஆக்கிரமிப்புகளை போட்டோ எடுத்துவர அனுப்பியுள்ளார். அப்போது, அவரை செல்வகுமார் உள்பட 7 பேர் சேர்ந்து தாக்கி, உரிமையாளர் அலுவலகம் அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்த கமலஹாசனுடன் வாக்குவாதம் செய்து ஆபாசமாக திட்டி, முகத்தில் தாக்கி உள்ளனர். இதில் அவரது பல் உடைந்தது. இதையடுத்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியவர் பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார், செல்வகுமார் மற்றும் இவரது நண்பர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், தமிழரசன் (28), சுதாகர் (37) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான விசிக பிரமுகர் செல்வகுமார் உள்பட 5 பேரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று விசிக பிரமுகர் செல்வகுமார் (36), அவரது கூட்டாளிகள் பரத் (27), கோவிந்தராஜ் (39), ஜெபர்சன் (42), ராகேஷ் (38) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post குடியிருப்பு உரிமையாளரை தாக்கிய வழக்கில் விசிக பிரமுகர் உள்பட 5 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.