பெண் மீது தாக்குதல் பிரபல ரவுடிகள் கைது

சென்னை: திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பம், பழனி அம்மன் கோயில் 6வது தெருவில் வசிப்பவர் தேசம்மாள் (45). கடந்த 13ம் தேதி மாலை, இவரது மகன் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் தேசம்மாள் மகனின் இருசக்கர வாகனத்தை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதை தேசம்மாள் கண்டித்ததால், அந்த இருவரும் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து தேசம்மாள் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், பிரவீன் (30), சரத்குமார் (28) ஆகிய இருவர் தேசம்மாளை தாக்கியது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர். இதில், பிரவீன் மீது 8 வழக்குகளும், சரத்குமார் மீது 13 வழக்குகள் உள்ளதும், இவர்கள் இருவரும் அண்ணாசதுக்கம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post பெண் மீது தாக்குதல் பிரபல ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: