இந்த கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்க உலகநாதனின் கூட்டாளிகள் கோபி (எ) வெங்கடேசன், ஆகாஷ், செல்லதுரை, கிஷோர், ஆகிய 4 பேர், பயங்கர ஆயுதங்களுடன் காசிமேடு திடீர் நகர் பூங்கா அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் கிஷோர், கோபி (எ) வெங்கடேசன், ஆகாஷ் ஆகிய 3 பேரும் மதில்சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றபோது, 3 பேருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவர்கள் 3 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து, மைதானத்தில் பதுங்கி இருந்த செல்லதுரையை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து, 7 கத்தி, 1 கோடாரி, ஒரு கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் இச்சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post நண்பனை கொன்றவர்களை பழிதீர்க்க கொலை திட்டம் தீட்டிய ரவுடிகள் சுற்றிவளைப்பு: தப்ப முயன்ற 3 பேருக்கு எலும்பு முறிவு, கத்தி, கோடாரி உள்ளிட்டவை பறிமுதல் appeared first on Dinakaran.