மதுரை, செப். 17: தென்மண்டல டேக்வாண்டோ போட்டியில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் 6 பதக்கங்களை வென்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தென்மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி கடந்த செப்.10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளில் உள்ள 260 பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஆறு வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றனர்.இதன்படி மாணவிகள் ராகவி தங்கப்பதக்கம் வென்றார். வைஷ்ணவி, லக்சனா, தஷ்வதா, நேஹா சரஸ்வதி, மிராஷி சிங் மற்றும் மாணவன் நிதீஷ்குமார், மாணவிகள் நேஹவீனா, ஆலமீன் ஆயிஷா, ஷஹானா ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர். இப்போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவர்கள் அக்டோபர் மாதம் உத்தரகாண்டில் நடக்கவிருக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மதுரை மாவட்ட டேக்வாண்டோ பயிற்சியாளர்கள் நாராயணன், பிரகாஷ் குமார் மற்றும் விஜய் அருணாச்சலம் உள்ளிட்டோர் பாராட்டினர்.
The post தென்மண்டல டேக்வாண்டோ போட்டி 9 பதக்கங்கள் வென்ற மதுரை மாணவர்கள் appeared first on Dinakaran.