மின் விபத்துகளை தவிர்க்கும் வழிமுறைகள்

 

திண்டுக்கல், டிச.8: மின் வாரிய துறையினர் தெரிவித்துள்ளதாவது: அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடவேண்டாம். இது குறித்து உடனே அருகில் உள்ள மின் பிரிவு அலுவலகத்திற்கு தகவல் தெரியப்படுத்தவும். வீட்டிலோ அல்லது விவசாய மின் இணைப்பிலோ ஏற்படும் குறைபாட்டினை தானே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம். மின் மாற்றி, மின்சார கம்பம், மின் பாதையில் மழைக்காலத்தில் ஏறக்கூடாது. பழுதடைந்த மின்பாதைகள், மின் கம்பங்கள், மின் இழுவைக் கம்பிகள் ஆகியவற்றை அருகிலுள்ள மின் பிரிவு அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மின்பாதைகளின் அருகே வளர்ந்துள்ள மரம் மற்றும் மரக்கிளைகளை தன்னிச்சையாக வெட்டக்கூடாது. மின் பிரிவு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின் நிறுத்தம் செய்து மின் பிரிவு அலுவலகம் மூலம் அகற்றிட வேண்டும். மின்பாதைகளின் ஓரத்தில் நீளமான கம்பி, பைப், ஏணி, கொடிக்கம்பம் என பொருட்களை பயன்படுத்த வேண்டாம். மழை நேரங்கள் உட்பட மின் பாதைகளில் கவனத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றனர்.

Related Stories: