விருதுநகரில் ரத்ததானம்

 

விருதுநகர், டிச. 8: விருதுநகர் ஆத்துப்பாலம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நெல்லை மண்டல செயலாளர் டாக்டர் பிரேம்நாத் முகாமை துவக்கி வைத்தார்.  சிறப்பு விருந்தினர்களாக நம்மவர் தொழிற் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சொக்கர், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டனர். இந்த முகாமில் ரத்த தானம் செய்த 100க்கும் மேற்பட்டோருக்கு தலைக்கவசம், ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டன.  இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட செயலாளர் காளிதாஸ், நகர செயலாளர் கமல் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். அரசு மருத்துவமனை டாக்டர் தலைமையிலான குழுவினர் ரத்தத்தை சேகரித்தனர்.

Related Stories: