பேரையூர், டிச. 8: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகே வன்னிவேலம்பட்டியில், திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் தலைமை தாங்கினார். டி.கல்லுப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜன், முன்னிலை வகித்தார். இதில் 1600 ரேஷன் கார்டுகள் உள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் தேர்தல் பொறுப்பாளர் டிங்கோ அலாவுதீன், மாவட்ட பொறுப்பாளர் முத்துராமன், இளைஞரணி விமல், டி.கல்லுப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மதன்குமார், ஆதிதிராவிட நலத்துறை அணி பரமசிவம், பேரூர் கழக செயலாளர்கள் முத்துக்கணேசன், வருசை முகம்மது, மாவட்ட இளைஞரணி சாதிக், ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன், ஒன்றிய பிரதிநிதி முருகன், பேரையூர் ஆறுமுகம், சாரதி, அமைப்பாளர் மணிகண்டன், துரைமருது, மகளிரணி சண்முகவள்ளி, சுவர்ணா,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
