கயத்தாறு, டிச.8: கயத்தாறில் வணிகர் சங்க உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. வணிக நலவாரியத்தில் பதிவு செய்தல், இனி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சங்கத்திற்கான சொந்த கட்டிடம், சங்க வரவு -செலவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கயத்தாறு ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் நிரந்தரமாக வந்து செல்வதற்கும், கயத்தாறை சுற்றியுள்ள கிராமங்களுக்கு திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி அரசு போக்குவரத்து கோட்டங்களில் இருந்து புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க சங்கம் மூலமாக அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
