தியாகராஜ நகர், டிச.8:பழவூர் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீகலா விடுத்துள்ள செய்திகுறிப்பு: பழவூர் துணை மின்நிலையத்தில் இன்று 8ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பழவூர் மின் விநியோகத்துக்குட்பட்ட ஆவரைக்குளம், அம்பலவாணபுரம், பழவூர், யாக்கோபுபுரம், சிதம்பரபுரம், சிவஞானபுரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
