இன்று மின்குறைதீர் கூட்டம்

 

மானாமதுரை, டிச.8: மானாமதுரையில் மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது.
சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் விசாலாட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மானாமதுரை மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடக்க உள்ளது. இதில் மானாமதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Related Stories: