போடி, டிச.8: போடி நகர் காவல் நிலைய எஸ்.ஐ.கிருஷ்ணவேணி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போடி பஸ் நிலையத்தில் கண்காணித்த போது போடி அருகே குரங்கணியில் இருக்கும் முதுவாக்குடியை சேர்ந்த செல்வராஜ் மகன் தேவேந்திரன்(18) என்பவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட ஆறு பாக்கெட் புகையிலை இருந்ததை பறிமுதல் செய்து கைது செய்தார்.
இதுபோல் குரங்கணி மெயின் ரோட்டில் கண்காணித்த போது குரங்கணி மெயின் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வரும் ரவீந்திரன் மனைவி சாந்தி (55) என்பவர் சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்தார். 450 கிராமை பறிமுதல் செய்து கைது செய்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
