செய்துங்கநல்லூர், டிச. 8: கொங்கராயக்குறிச்சி சேகரம் தூய திரித்துவ சிஎஸ்ஐ தேவாலயத்தில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல அளவிலான உபவாச ஜெபம் நடந்தது. சேகர தலைவர் ஜோஸ்வா அருள்ராஜ் முன்னிலை வகித்தார். சேகர குருவானவர் ஜான் பால்ராஜ் சாமுவேல் தலைமை வகித்து ஜெபம் செய்து உபவாச ஜெபத்தை துவக்கி வைத்தார்.
இதில் பாடல் ஆராதனை, தேசத்தின் நன்மை, சமாதானம், மக்களின் நன்மை, ஏழை எளிய குடும்பத்தினருக்காக ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டது. தொடர்ந்து சகோதரர் சார்லஸ் ஏஜி மணி, செய்தி அளித்தார். ஆராதனையில் உதவி குரு ஏமி கார்மைக்கேல், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல குருமார்கள், சபை மக்கள் உள்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கொங்கராயக்குறிச்சி தூய திரித்துவ ஆலய சபை மக்கள் செய்திருந்தனர்.
