தொண்டி, டிச.8: புயல், மழை காரணமாக கடந்த ஒரு மாதமாக மீனவர்கள் சரியாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பெரும்பாலான நேரங்கள் அரசு மீன்பிடிக்க தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. அதனால் மீன்கள் விலை அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்வதால் மீன் மார்க்கெட் பரபரப்பாக காணப்படுகிறது. நேற்று போதிய அளவு மீன்கள் வரத்து இருந்தும் நண்டின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. கட்டாமீன், பாறை மீன் கிலோ 500 ரூபாய்க்கும், கிழங்கான், ஊழி உள்ளிட்ட மீன்கள் ரூ.400ல் இருந்து ரூ.500க்கும், நண்டு கிலோ 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து மீனவர் சீனி ராஜன் கூறுகையில், மீன்பாடு நன்றாக இருப்பதால் மீன்கள் விலை குறைந்துள்ளது. நண்டு ஏற்றுமதி மற்றும் கம்பெனிக்கு நேரடியாக கொடுப்பதால் விலை அதிகம் உள்ளது என்றார்.
