அரியலூர், செப்.1: அரியலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. சத்திரம் அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று, அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் அரியலூர் கிளைத் தலைவர் முஹம்மது அய்யூப் கான் சேக் அலாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சம்சுதீன் போதையினால் ஏற்படும் பாதிப்புகள், இளைஞர்களின் எதிர்காலம் குறித்து விளக்கிப்பேசினார். நிர்வாகிகள் சபிபுல்லா, சையது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் இஸ்லாமிய பெண்கள் திரளாக பங்கேற்று போதைப் பொருள்களை பயன்படுத்த வேண்டாம் என்ற முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.
The post அரியலூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.