இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேருடன் சென்ற ரஷிய ஹெலிகாப்டர் நாட்டின் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் காணாமல் போனதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைப்பின் முதற்கட்டத் தகவல் வெளியானது. இந்நிலையில், மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 1960 களில் வடிவமைக்கப்பட்ட இரண்டு எஞ்சின் ஹெலிகாப்டரான எம்ஐ-8 ரஷியாவிலும், அண்டை நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
The post 22 பேருடன் ரஷ்ய ஹெலிகாப்டர் திடீர் மாயம்: முழு வீச்சில் தேடும் பணி!! appeared first on Dinakaran.