இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளின் துரந்த் எல்லைக் கோட்டுப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. 2600 கி.மீ. நீளமுள்ள எல்லையில் 53 இடங்களில் ஆப்கானிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து பாகிஸ்தான் ஆபரேஷன் கசாப் லில் ஹக் என்ற பெயரில் மிகப்பெரிய பதில் தாக்குதலை நடத்தின. பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் இதுவரை 331 தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் கூறுகையில்,‘‘பாகிஸ்தான் நடத்திய ஆபரேஷன் கசாப் லில் -ஹக் நடவடிக்கையின்போது 104 ராணுவச் சாவடிகள் அழிக்கப்பட்டது. மேலும் 22 எல்லைச் சாவடிகளை பாகிஸ்தான் கைப்பற்றியது. 163 டாங்கிகள், கவச வாகனங்கள் அழிக்கப்பட்டது. வான்வழித்தாக்குதலில் 37 இடங்கள் தாக்கப்பட்டன” என்றார்.
