பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஹோட்டல்களை விட்டு வெளியேற தனது குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்!

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஹோட்டல்களை விட்டு வெளியேற தனது குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஈரானின் அடுத்தடுத்த தாக்குதல்கள் ஹோட்டல்கள் மீது நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மனாமா நகரில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டல் (Crowne Plaza Hotel) மீது மார்ச் 1, 2026 அன்று தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் காயங்கள் ஏற்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம் கண்காணித்து வருகிறது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு விடுக்கப்படும் அறிவுறுத்தல் என்னவென்றால், வருங்காலங்களில் ஹோட்டல்கள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்பதால், மனாமா நகரில் உள்ள ஹோட்டல்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: