ஈரான்: ஈரான் உச்ச தலைவர் காமெனி இறந்துவிட்டதை அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவருடைய மரணத்திற்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காமெனியின் மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
