ஹார்முஸ் நீரிணை வழியாக இயக்கப்படும் தனது அனைத்து சரக்குப் போக்குவரத்துக் கப்பல்களையும் மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்துவதாக Maersk நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் சுமார் 15% சரக்கு கண்டெய்னர்களை கொண்ட இந்நிறுவனத்தின் அறிவிப்பால், உலக எண்ணெய் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கில் ஈரானின் பதிலடி தாக்குதல் தொடர்வதால் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
