நிலச்சரிவில் சிக்கி 191 பேரை காணவில்லை; பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறேன்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம்

வயநாடு: நிலச்சரிவில் சிக்கி 191 பேரை காணவில்லை; பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறேன் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், கூறியதாவது,

* நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மீட்புக் குழுவினர் செல்ல தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
*அட்டமலை, சூரல்மலையில் உள்ளிட்ட இடங்களில் மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
*நிலச்சரிவில் சிக்கிய மக்களுக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்ல கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.
*வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன்.
*மீட்கப்படும் உடல்கள் விரைந்து உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
*நிலச்சரிவால் உயிரிழந்தோரின் உடல்களை விரைந்து உடற்கூராய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
*கோழிக்கோடு, திரிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவக் குழுவினர் வயநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
*சூரல்மலையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
*நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
*17 லாரிகளில் நிவாரண பொருட்கள் சூரல்மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
*நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலைக்கு 17 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
*79 ஆண்கள், 64 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
*நிலச்சரிவில் சிக்கிய 5,500-க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
*அடுத்த 24 மணி நேரத்தில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
*தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது.
*உறவுகளை இழந்தவர்களை மனரீதியாக தேற்றவேண்டியுள்ளது.
*நிலச்சரிவில் சிக்கி 191 பேரை காணவில்லை; பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
*19 கர்ப்பிணிகள் உட்பட 8,017 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
* நிலச்சரிவு மீட்பு பணிகளை கேரள அமைச்சர்கள் 9 பேர் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
* நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் 82 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

The post நிலச்சரிவில் சிக்கி 191 பேரை காணவில்லை; பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறேன்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: