போதைப்பொருள் பார்சல் வந்துள்ளதாக மிரட்டி பெண்ணிடம் ரூ.3.64 லட்சம் பறிப்பு: கேரள வாலிபர்கள் கைது

சென்னை: சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி இந்து (51) என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், அடையாளம் தெரியாத நபர், என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘பெடெக்ஸ் கூரியரில் இருந்து பேசுகிறோம். உங்களது பெயருக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதை சோதனை செய்தபோது, போதைப் பொருட்கள் உள்ளது. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார். சிறிது நேரத்தில், சைபர் க்ரைம் அதிகாரி என ஒருவர் ஸ்கைப் கால் மூலமாக என்னை தொடர்பு கொண்டு, ‘போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இருந்து உங்களை விடுவிக்க, பணம் கேட்டார். அதன்படி, என்னிடம் இருந்த 3 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு செலுத்தினேன். பணம் செலுத்தினேன். பிறகு தான் இது மோசடி என ெதரிந்தது, என்று தெரிவித்து இருந்தார். விசாரணையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த நித்தின் ஜோசப் (31) மற்றும் ரமேஷ் (32) ஆகிய 2 பேர், மோசடி செய்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post போதைப்பொருள் பார்சல் வந்துள்ளதாக மிரட்டி பெண்ணிடம் ரூ.3.64 லட்சம் பறிப்பு: கேரள வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: