போலீஸ்காரரை தாக்க முயன்ற போதை பாஜ நிர்வாகி கைது

திருப்பூர்: திருப்பூர், மத்திய போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றுபவர் கருப்பையா (38). இவர் நேற்று முன்தினம் இரவு ஆண்டிபாளையம் சோதனை சாவடியில் எஸ்.ஐ உடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எஸ்.ஆர்.நகரை சேர்ந்த பாஜ வடக்கு மாவட்ட பிரசார அணி செயலாளர் செல்வம் (42), போதையில் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். சோதனைசாவடியில் போலீசார் வாகன தணிக்கை செய்வதை பார்த்ததும் தன்னை பெரிய ஆள் என காட்டிக்கொள்ள ஏட்டு கருப்பையாவிடம் ‘‘நான் யார் தெரியுமா?’’ எனக்கேட்டு தகராறு செய்து, அங்கிருந்த ஹெல்மெட்டால் அவரை தாக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏட்டு கருப்பையா, அங்கிருந்தவர்கள் உதவியுடன் போதையில் இருந்த செல்வத்தை மத்திய போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றார். இதுகுறித்து ஏட்டு கருப்பையா கொடுத்த புகாரின்பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளில் பேசுதல், பொது இடத்தில் பொதுமக்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிந்து செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: