குளச்சல்: திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இதில் குமரி மாவட்டம் பைங்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் நண்பரின் முகநூல் கருத்துக்கு தனது பதிலை பதிவு செய்திருந்தார். அந்த கருத்துக்கு மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த, குமரி மேற்கு மாவட்ட பா.ஜ. பொருளாதார பிரிவு துணை தலைவர் சுரேஷ் எதிர்கருத்தை பதிவு செய்திருந்தார்.
மேலும் பைங்குளம் நபர், மகளுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பதிவு செய்திருந்தார். இதைப்பார்த்த பைங்குளம் நபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீஸ் இது தொடர்பாக ஆபாசமாக பதிவிட்ட சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய குளச்சல் மகளிர் போலீசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து மகளிர் போலீசார் ஆபாச பதிவிட்ட சுரேஷ் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
