ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது பாட்டில் 4 டாக்டர்கள், மருந்தாளுநர் அதிரடி சஸ்பெண்ட்

சிவகங்கை: கல்லல் அருகே செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மது பாட்டில் இருந்த விவகாரத்தில் 4 மருத்துவர்கள் மற்றும் ஒரு மருந்தாளுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே செம்பனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் தங்கும் அறையில் கடந்த 31ம் தேதி இரவு மது பாட்டில்கள், கறி மற்றும் திண்பண்டங்கள் இருந்தன. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவம் குறித்து, மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் அங்கு பணிபுரிந்த சசிகாந்த், கவுஷிக், நவீன்குமார், மணிரத்தினம் ஆகிய 4 டாக்டர்கள் மற்றும் மருந்தாளுநர் கமலக்கண்ணன் ஆகிய 5 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி உத்தரவிட்டார். மேலும், அன்று பணியில் இருந்த செவிலியர் மற்றும் மருத்துவமனை ஊழியருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: