உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, சமத் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125வது பிரிவின் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்கான உத்தரவை எதிர்த்து ஒரு முஸ்லீம் கணவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பி.வி.நாகரத்னா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு அதை தள்ளுபடி செய்தது. மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், சிஆர்பிசி 125-ஆவது பிரிவு திருமணமான பெண்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
The post விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண் தனது கணவரிடம் ஜீவனாம்சம் பெறலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.