செட்டிபாளையம் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைள் திறப்பு

மதுக்கரை,ஜூலை4:கோவை மாவட்டம், செட்டிபாளையம் பேரூராட்சி ஓராட்டுகுப்பை பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்தது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், செட்டிபாளையம் பேரூராட்சி தலைவர் ரங்கசாமியை நேரில் சந்தித்து பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் செயல்பட்டு வரும் பிராட்கென் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறப்பட்டு, ரூ.31.32 லட்சம் செலவில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.இந்தநிலையில் கட்டுமான பணிகள் முடிவடைந்து,புதிய பள்ளி கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.பிராட்கென் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சி.இ.ஒ,முன்னிலையில் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில்,பிராட்கெனின் தள மேலாளர் ராஜ்குமார் பாலன்,பேரூராட்சி கவுன்சிலர்கள்,தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

The post செட்டிபாளையம் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைள் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: