கோவை, பிப். 26: ஆர்.நல்லகண்ணு மறைவுக்கு கோவை மதிமுக அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு (101) மறைவையொட்டி, கோவை மாநகர் மாவட்ட மதிமுக அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநில அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், உயர்நிலை குழு உறுப்பினர் ஆர்.ஆர்.மோகன்குமார், மாநில சட்டத்துறை செயலாளர் வக்கீல் சூரி.நந்தகோபால் உள்ளிட்ட தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு உருவப்படத்துக்கு மலர்அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில், மாநகர மாவட்ட துணை செயலாளர்கள் பயனீர் தியாகு, சு.தூயமணி, பகுதி செயலாளர் எஸ்.பி.வெள்ளியங்கிரி, பொ.சு.முருகேசன், எல்.லூயிஸ், மு.ராமநாதன், வெ.சு.சம்பத், ச.ப.விஸ்வராஜ், சி.மணிக்குமார், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பழையூர் கிருஷ்ணமூர்த்தி, குனிசை சண்முகம், ஆனந்த், குனிசை சிவக்குமார், சீரநாயக்கன்பாளையம் சங்கர், நாகேந்திரன், ஸ்டாலின், க.பிரபாகரன், வீரபாண்டி வேலு, அரவிந்த்குமார், யூசுப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
