கோவை: கோவை வீரகேரளம் அண்ணாநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் ரங்கராஜன்(72). இவர், தனது மகன் சதீஷ்பாபு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், ரங்கராஜன் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த ரங்கராஜன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாக வீடு திரும்ப வில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்பாபு தேடி பார்த்ததில், ரங்கராஜன் தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள கிருஷ்ணாம்பதி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், அங்கு வந்த போலீசார் அங்கிருந்தவர்கள் உதவியுடன் முதியவரின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
