புகையிலை பொருட்கள் அழிப்பு

தொண்டாமுத்தூர், மார்ச் 4: கோவை அருகே ஆலாந்துறை போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு சுமார் 346 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அவ்வாறு பறிமுதலான புகையிலைகளை நேற்று ஆலாந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மோகன்தாஸ் தலைமையில் மத்வராயபுரம் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் பொக்லின் மூலம் குழி தோண்டப்பட்டு ஆசிட் ஊற்றி அனைத்து புகையிலைகளும் அழிக்கப்பட்டது.

 

Related Stories: