9 பவுன் நகை திருடிய பக்கத்து வீட்டுக்காரர் கைது

கோவை,பிப்.28: கோவை சின்னியம்பாளையம் பிஎல்எஸ் நகரை சேர்ந்தவர் சபி உல்லா. இவரது மனைவி ஷகீலாபேகம் (60). இவர்கள் வீட்டுடன் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ஷகீலா பேகத்தின் தாயார் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஷகீலா பேகம் குடும்பத்துடன் உடுமலை சென்றிருந்தார்.

அதன்பின்பு கோவை திரும்பிய அவர் மளிகை கடையை சரியாக திறக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் எதேச்சையாக ஷகீலா பேகம் வீட்டு பீரோவை திறந்து பார்த்த போது, அதில் வைத்திருந்த 9 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஷகீலாபேகம் இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், நகையை திருடியது பக்கத்து வீட்டை சேர்ந்த ஆதிலிங்கம் (36) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: